News & Announcement
இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று 15.10.2026 ஆம் தேதி இருதய உள்ஊடுருவி கதிரியக்க ஆய்வகம் (CATH LAB) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சிவகுரு பிரபாகரன் ஐ.ஏ.எஸ் முன்னிலையில், விழாவில் மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. மதன் ராஜ் அவர்கள் சிறப்புரையாற்ற, மாண்புமிகு மருத்துவம், மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் டாக்டர். அருண் ராஜ் அவர்களால் இன்று குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைக்கப்பட்டது. இவ்விழாவில் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர். செல்வாம்பிகை அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விழாவில் மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. மதன் ராஜ் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். மாண்புமிகு மருத்துவம், மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் டாக்டர். அருண் ராஜ் அவர்கள் விழாப்பேருரை ஆற்றினார்கள். விழாப் பேருரையின் போது இந்த அரசு மருத்துவத் துறைக்குச் செய்து வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்கள். இராமநாதபுரம் மட்டுமல்லாமல் இந்த கேத் லேப் வசதியினால், அருகில் உள்ள மற்ற மாவட்டங்களான விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட மக்களும் பயன்பெறுவார்கள். இதய நோயாளிகள் ஆஞ்சியோ உள்ளிட்ட வசதிகளைப் பெற ஒவ்வொரு முறையும் மதுரைக்குச் செல்லும் தேவை இருந்தது. தற்போது நிருவப்பெற்றுள்ள கேத் லேப் வசதியால், ஏழை எளியோர்க்கும் எளிதில் நவீன உயிர் காக்கும் இதய சிகிச்சை கிடைக்கும் என்று உறுதியளித்தார். இத்துடன் செவிலியர்களுக்கான பணிநியமன ஆணைகளையும் அமைச்சர் வழங்கினார். விழாவின் இறுதியாக, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர். நூர் முகமது அவர்கள் நன்றியுரை ஆற்ற , நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
விழாவில் மருத்துவப் பேராசிரியர்கள், மருத்துவ உதவிப் பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள், அரசு அலுவலர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
We sincerely welcome everyone to participate in "Cardiology Cath Lab Inauguration" by Honourable Health Minister Dr. Arun Raj In the Auspiciois Presence of Respected Health Secretary Dr. Darez Ahamed IAS , Mr. Nawas Kani MP., District Collector, Ramanathapuram today 15.10.2026, 2pm to be Held at Government Ramanathapuram Medical College Hospital, Ramanathapuram.
We are happy to inform that our respected Dean mam and VP mam felicitated Our College quiz club student members Akhil, Joel and Rezin Benedict Jonas (2023 batch) for securing fourth place in the Medrenaline quiz (all 19 subjects) conducted at Govt Kilpauk medical college on 08.10.2026..
Respected all, The Department of General Medicine, Government Ramanathapuram Medical College Hospital, observed World Geriatric Day on October 1,2026 with active participation from doctors and nursing students. The programme focused on creating awareness regarding healthy ageing, prevention of diseases, and geriatric care. PROGRAMME HIGHLIGHTS ✓ Geriatric Health Awareness Programme conducted by doctors. ✓ Poster Presentation conducted for nursing students. ✓ Slogan Competition conducted for nursing students. ✓ Prizes and certificates were presented to the winners. We sincerely thank our respected Dean, Dr. G. Selvambigai, M.D., Medical Superintendent, Dr. S.A.K. Noor Mohamed, M.D., D.M., RMO Dr. Manojkumar, ARMO Dr. Sivakumar, and HOD Dr. Brinda Madam for their valuable guidance and support. We also extend our sincere thanks to all the doctors, nurses, nursing students, medical staff and everyone who participated and supported the programme. Thank you. Department of General Medicine Government Ramanathapuram Medical College Hospital
Next
Awareness Rally Held on World Mental Health Day
As part of World Mental Health Day, an awareness rally was held today (09.10.2026) at Ramanathapuram Government Medical College Hospital, under the leadership of Dean Dr. Selvambigai. The event was attended by Medical Superintendent Dr. Noor Mohammed, Deputy medical superintendent Dr. Arun kumar, Resident Medical Officer Dr. Manoj Kumar, Assistant Resident Medical Officers Dr. Kannagi and Dr. Periyar Lenin, Head of the Department of Psychiatry Dr. Shanmugapriya, along with doctors, medical students and nursing staffs.
பிங்க் அக்டோபர் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம்
• இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அக்டோபர் 7 முதல் 31 வரை மார்பகப் புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
• மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவும், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கவும் “Pink October” மாதத்தையொட்டி இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பொது அறுவை சிகிச்சைத் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
• உலக சுகாதார அமைப்பு (WHO) 2026 ஆம் ஆண்டிற்கான மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தின் கருப்பொருளாக “Every story is unique, every journey matters” – “ஒவ்வொரு கதையும் தனித்துவமானது; ஒவ்வொரு பயணமும் முக்கியமானது” என்பதை அறிவித்துள்ளது
அக்டோபர் 7 முதல் 31 ஆம் தேதி வரை மருத்துவமனைக்கு வரும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, மார்பக சுயபரிசோதனை குறித்த பயிற்சி மற்றும் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
சந்தேகத்திற்குரிய அறிகுறிகள் உள்ள பெண்களுக்கு பிரத்யேகமாக பெண் மருத்துவ நிபுணர்களே பரிசோதனை செய்து ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது!
மேலும், அக்டோபர் 15 ஆம் தேதி மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட உள்ளது. • மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பங்கேற்று பொதுமக்களிடையே மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர்.
உலக சுகாராத மையத்தின் வழிகாட்டுதல் என்பது ஆரம்ப காலத்திலேயே இந்த புற்று நொயை கண்டுபிடிப்பதேயாகும். • அதாவது இந்த நோய் stage 1 and 2- இல் இருக்கும் போதே 60 சதவிகத்துக்குமேல் கண்டுபிடிக்க வேண்டும் என்பதேயாகும்
இது புற்று நோயை முழுவதும் அகற்ற 80 சதவிகத்துக்கு மேல் சாத்தியமாக்கும் என்பதே உண்மை! • Stage 3 என்பது குணப்படுத்தும் தன்மையை வெகுவாக குறைத்து விடும் ! • Stage 4 என்பது குணபாடுத்த முடியாத நோயாகும்! • மார்பகப் புற்றுநோய்க்கான High-Risk பெண்கள்!
1)தாய், சகோதரி அல்லது மகளுக்கு மார்பகப் புற்றுநோய் இருந்த குடும்ப வரலாறு. • 2)இளம் வயதில் மார்பகப் புற்றுநோய் ஏற்பட்ட பல குடும்ப உறுப்பினர்கள் அல்லது மார்பக/கருப்பை (ovarian) புற்றுநோயின் குடும்ப வரலாறு. • 3)முன்னர் மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டவர்கள். • 4) குழந்தை பேறு இல்லாத பெண்கள் ! • 5) கதிர் வீச்சு சிகிச்சை முறைக்க மேற்கொண்டவர்கள் ! • 6) எடை அதிகம் உள்ளவர்கள் • 7) ஹார்மோன் மாத்திரைகள் உபயோகப்படுத்தியவர்கள் • தாய்பால் அதிக நாள் கொடுத்தவர்களுக்கு மற்றவர்களை விட இந்த நோய் வரும் சாத்தியம் குறைவு! சோயாபீன்ஸ் மற்றும் ஆளி விதைகள் (Flax seeds) எள்ளு கொண்டைக்கடலை போன்ற உணவு வகைகள் இந்த நோய் வரும் வாய்ப்புகளைக் குறைக்கலாம்!
பரிசோதனை முறைகள் • மார்பகப் புற்றுநோய் பரிசோதனை, வயது, அறிகுறிகள் மற்றும் தனிநபரின் ஆபத்து காரணிகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும்: • 1). Clinical Breast Examination (CBE) – மருத்துவரால் மார்பகங்கள் மற்றும் கைக்குழிப் பகுதியில்(axilla) பரிசோதனை. • 2)Mammography – • குறிப்பாக வழக்கமான screening 40 வயது அதற்கு மேல்ப் பிரிவினருக்கு இந்த மருத்துவ பரிசோதனை கட்டணமின்றியே செய்யப்படும் ! • 3)Ultrasound of breast – • 40 வயதுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு • இந்த பரிசோதனை செய்யப்படும் ! • 4)Further diagnostic evaluation – சந்தேகத்திற்குரிய கண்டுபிடிப்புகள் இருந்தால் தேவைக்கேற்ப FNAC/core needle biopsy மற்றும் பிற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். • 5 ) சுய மார்பக பரிசோதனை முறைகளும் பயிற்றிவிக்கப்படும்!
யார் பரிசோதனைக்கு வரலாம்? • 1)40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் மார்பகப் பரிசோதனை மற்றும் மருத்துவர் ஆலோசனைக்காக முகாமிற்கு வரலாம். • 2)40 வயதுக்குக் குறைவான பெண்களும் மார்பகத்தில் கட்டி, அசாதாரண வலி, காம்பிலிருந்து சுரப்பு, காம்பு அல்லது மார்பகத் தோலில் மாற்றம் போன்ற அறிகுறிகள் இருந்தால் வயது பாராமல் மருத்துவப் பரிசோதனைக்கு வர வேண்டும். • 3)குடும்பத்தில் மார்பகப் புற்றுநோய் அல்லது தொடர்புடைய புற்றுநோய் வரலாறு உள்ளவர்கள்,குறிப்பாக தாய், சகோதரி அல்லது மகளுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால், மருத்துவரின் ஆலோசனைப்படி முன்னதாகவே மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும். • 4)ஏற்கனவே மார்பகத்தில் சந்தேகத்திற்குரிய மாற்றம் கண்டறியப்பட்டவர்கள் அல்லது முன்பு மார்பகப் பரிசோதனை/சிகிச்சை மேற்கொண்டவர்கள் தேவையான மருத்துவ ஆவணங்களுடன் வரலாம்.
பல்துறை மருத்துவக் குழுவின் ஆதரவு • இந்த விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளுக்கு பொது அறுவை சிகிச்சைத் துறையுடன், புற்றுநோய் சிறப்பு மருத்துவர் மற்றும் கதிரியக்கவியல் துறை, நோய்குறியியல் துறைகளின் ஆதரவும் வழங்கப்படுகிறது. • மார்பகப் புற்றுநோய் கண்டறியப்படும் பெண்களுக்கு தேவையான மேலதிக மதிப்பீடு மற்றும் அறுவை சிகிச்சை, chemotherapy, targeted therapy, hormonal therapy உள்ளிட்ட சிகிச்சைத் திட்டங்கள், நோயின் நிலை மற்றும் தனிநபரின் தேவைக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட நிபுணர்களால் திட்டமிடப்படும். • மார்பகப் புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் முழுமையான சிகிச்சை மற்றும் குணமடையும் வாய்ப்பு அதிகம். • எனவே, பெண்கள் நம் அரசு மருத்துவ மனையின் இந்த முகாமை பயன்படுத்தி முழுமையாக பயனடையுமாறு கேட்டுக்கொள்ள்ப்படுகிறார்கள்!
National Pharmacovigilance Awareness Week
On 24.9.2026, on the occasion of the 6th National Pharmacovigilance Awareness Week, an Awareness Rally on pharmacovigilance was held at the Government Ramanathapuram Medical College, inaugurated by the college principal, Prof. Selvambikai.
Along with the Medical Superintendent, Resident Medical Officers, Professor and Head of the Department of Pharmacology, Associate Professors, and Assistant Professors, a large number of medical students participated in the rally to raise awareness among the general public regarding the side effects of medicines and how to report them.
Marking National Pharmacovigilance Awareness Week, competitions including speech and painting contests were organized by the Department of Pharmacology for the students, and prizes were distributed to the winners.
உலக இருதய தினம் 2026 விழாk
இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக இருதய தினம் 2026 விழா, “DON’T MISS A BEAT – SEE THE SIGNS • PROTECT THE HEART • SAVE A LIFE” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இருதயவியல் துறையால், பொதுமருத்துவத் துறை மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுத் துறையினரின் பங்களிப்போடு 29.09.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.
மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி. செல்வம்பிகை, M.D., மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.ஏ.கே. நூர் முகமது, M.D., D.M., RMO டாக்டர் மனோஜ்குமார், ARMO டாக்டர் சிவகுமார், இருதயவியல் துறை மருத்துவர் டாக்டர் பொன்ராஜ், M.D., D.M., இணைப் பேராசிரியர் டாக்டர் அருண்குமார், M.D., மற்றும் துறை சார்ந்த மருத்துவர்கள், செவிலியக் கண்காணிப்பாளர்கள், செவிலியப் போதகர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். உலக இருதய தினத்தின் முக்கிய நோக்கமாக, மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகளைப் பொதுமக்கள் அறிந்து கொள்வது, இருதய நோய்க்கான ஆபத்துக் காரணிகளைக் கட்டுப்படுத்துவது மற்றும் அவசர நேரத்தில் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், உலக இருதய தினத்தை முன்னிட்டு பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், செவிலிய மாணவிகள் ஆகியோருக்காக வினாடி வினா, கோலம், ஓவியப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. “ஒரு நொடியையும் தவறவிடாதீர்கள் – அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள், இருதயத்தைப் பாதுகாத்திடுங்கள், ஒரு உயிரைக் காப்பாற்றுங்கள்” என்ற செய்தியைப் பொதுமக்களிடம் கொண்டு செல்வதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
சர்வதேச பாம்புக்கடி தடுப்பு தினம் 19.9.26
சர்வதேச பாம்புக்கடி தடுப்பு தினம் 19.9.26 அரசு இராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிகழ்ச்சி அறிக்கை. மதிப்பிற்குரிய மருத்துவக் கல்லூரி முதல்வர், மருத்துவர் பேராசிரியர் செல்வாம்பிகை அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் சர்வதேச பாம்பு கடி தடுப்பு தினம் 19 9 26 அன்று அரசு ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்கள் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. விழாவில் மருத்துவ கண்காணிப்பாளர், பொது மருத்துவப் பிரிவு பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், அவசர சிகிச்சை பிரிவு பேராசிரியர், செவிலிய கண்காணிப்பாளர், செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர், செவிலியர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பிக்கப்பட்டது. வந்திருந்த அனைவரையும் வரவேற்று அவசர சிகிச்சை பிரிவு பேராசிரியர் பேசினார். பின்னர் நிகழ்ச்சியை மருத்துவ கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். பொது மருத்துவ பிரிவு பேராசிரியர் பாம்பு கடி குறித்து மக்கள் விழிப்புணர்வுக்காக விரிவாக பேசினார். மருத்துவ கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கையேடுகளை (Pamphlet) விநியோகித்தார். செவிலியர் பயிற்சி பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு நகைச்சுவை நாடகம் நடத்தப்பட்டது. பொது மருத்துவப் பிரிவு உதவி பேராசிரியரின் Snake Bite awareness Ppt நடத்தப்பட்டது. பொதுமக்களுக்கான விழிப்புணர்வு காட்சி படம் ஒளிபரப்பப்பட்டது. பொது மக்கள் பார்வைக்காக விழிப்புணர்வு Posterகள் ஒட்டப்பட்டிருந்தன. தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெற்றது.
சமூகநீதி நாள் – உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
சமூகநீதி நாளை முன்னிட்டு, அரசு ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அரசு ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் G. செல்வாம்பிகை அவர்கள் தலைமை வகித்தார். மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் நூர் முஹம்மது அவர்கள் மற்றும் RMO டாக்டர் மனோஜ்குமார் அவர்கள் கலந்து கொண்டனர். மேலும், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் போது, பங்கேற்ற அனைவரும் சமூகநீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். சமத்துவம், பாகுபாடின்மை, சமூக நல்லிணக்கம், ஒவ்வொரு தனிநபரின் கண்ணியத்தை மதித்தல் மற்றும் அனைவரின் உரிமைகள் மற்றும் நலனைப் பாதுகாத்தல் ஆகிய கொள்கைகளை கடைப்பிடிப்பதற்கான உறுதிப்பாட்டை உறுதிமொழி வலியுறுத்தியது. அனைவருக்கும் சமத்துவமான, உள்ளடக்கிய மற்றும் நியாயமான சமூகத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை இந்நிகழ்ச்சி எடுத்துரைத்ததுடன், பாகுபாடின்றி கருணையுடனும் கண்ணியத்துடனும் அனைவருக்கும் தரமான மருத்துவ சேவையை வழங்குவதற்கான மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பணியாளர்களின் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தியது.
INAUGURATION CEREMONY
National Eye Donation Awareness Fortnight
Government Ramanathapuram Medical College observed National Eye Donation Awareness Fortnight from 25th August to 8th September 2026 through a photo booth inauguration, human chain, awareness rally, pledge and public outreach activities.
Students Wall painting in Department of Anatomy
The Department of Community Medicine celebrated World Health Day
The Department of Community Medicine celebrated World Health Day today under the esteemed guidance and motivation of our respected Dean Madam, Vice Principal Madam, and Medical Superintendent Sir.
The program commenced with a sapling plantation, symbolizing our commitment to a healthier and greener future, followed by the formal inauguration. The event was enriched by the insightful speech by Dean Madam on the significance of World Health Day and the inspiring address of Vice Principal Madam
We were privileged to have Dr. Richard Raj sir, Joint Director of Animal Husbandry, Ramanathapuram District, who delivered a highly informative guest lecture.
We express our sincere thanks to our respected Dean Madam, Vice Principal Madam, and Medical Superintendent Sir for their constant support and encouragement. We also extend our heartfelt gratitude to Dr. Richard Raj Sir for his valuable contribution.
We further thank all the Heads of Departments, Associate Professors, and Assistant Professors who graced the occasion and made the event a grand success.
GOVERNMENT MEDICAL COLLEGE,RAMANATHAPURAM MBBS ADMISSION 2025-26 (CHECK LIST)
LIST OF ORIGINAL CERTIFICATES TO BE SUBMITTED AT THE TIME OF ADMISSION
- ALLOTMENT ORDER
- FEES RECEIPT
- NEET ADMIT CARD
- NEET SCORECARD
- 10TH MARK SHEET
- +1MARK SHEET
- +2MARK SHEET
- ADMIT CARD (FOR CBSE STUDENTS)
- +2 PASS CERTIFICATE (CBSE & OTHER BOARD STUDENTS)
- TRANSFER CERTIFICATE
- COMMUNITY CERTIFICATE
- NATIVITY CERTIFICATE
- CONDUCT CERTIFICATE
- BIRTH CERTIFICATE
- MIGRATION CERTIFICATE(CBSE & OTHER BOARD HSC STUDENTS)
- ELIGIBILITY CERTIFICATE FROM THE TAMIL NADU DR.MGR MEDICAL
UNIVERSITY (EXCEPT STATE BOARD & CBSE BOARD) - STUDENT AADHAR CARD
- PARENT AADHAR CARD
- FIRST GRADUATION CERTIFICATE (State Quota students – If applicable)
- BONAFIDE CERTIFICATE FOR PROOF OF STUDY FROM VISTD TO XII STD
FOR CANDIDATES STUDIED IN TAMIL NADU - BONAFIDE CERTIFICATE FROM CEO FOR PROOF OF STUDY FROM VISTD TO XIISTD FOR 5%CATEGORY
- ANNUAL INCOME CERTIFICATE (IF APPLICABLE)
- CERTIFICATES SHOULD NOT BE IN HINDI COMPLETELY.ENGLISH TRANSLATION OF THE CERTIFICATES SHOULD ALSO BE SUBMITTED.
- 04 SETS OF XERX COPIES OF ALL THE CERTIFICATES TO BE SUBMITTED AT THE TIME OF
