WORLD SUICIDE PREVENTION DAY – AWARENESS PROGRAMME
On the occasion of World Suicide Prevention Day, an awareness programme was organized by the Department of Psychiatry, Government Ramanathapuram Medical College Hospital, on 10.09.2026.
The programme was presided over by Dr. G. Selvambigai, Dean, Government Ramanathapuram Medical College. Dr. Noor Mohammed, Medical Superintendent, participated in the programme along with the Heads of Departments, Professors and Medical Students.
Dr. Shanmuga Priya, HOD, Department of Psychiatry, delivered the awareness presentation on suicide prevention and mental health.
As part of the programme, an awareness short film on suicide prevention was prepared and released by the medical students, highlighting the importance of mental health, timely support and seeking professional help during emotional distress.
உலக தற்கொலை தடுப்பு தினம் – விழிப்புணர்வு நிகழ்ச்சி
உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, அரசு ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மனநல மருத்துவப் பிரிவு சார்பில் 10.09.2026 அன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கு. செல்வாம்பிகை அவர்கள் தலைமை வகித்தார். மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் நூர் முஹம்மது கலந்து கொண்டார். மேலும், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.
மனநல மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் சண்முகப்பிரியா அவர்கள் தற்கொலை தடுப்பு மற்றும் மனநலம் தொடர்பான விழிப்புணர்வு உரையை வழங்கினார்.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, மருத்துவ மாணவர்களால் தயாரிக்கப்பட்ட தற்கொலை தடுப்பு மற்றும் மனநல விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டது. இக்குறும்படம் மூலம் மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு ஆதரவளித்தல், தற்கொலை எண்ணங்களைத் தடுப்பது மற்றும் உரிய நேரத்தில் மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Event Photographs
